இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன ஆதரவான ஹமாஸ் படைக்கும் இடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 600க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசியதில், மூன்று பெரிய கட்டடங்கள் தரைமட்டமாயின. இஸ்ரேல் ராணுவம் இதுவரை வான்வழித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், காசா எல்லையோரப் பகுதிகளில் முதல்முறையாக பீரங்கி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 31 குழந்தைகள், 19 பெண்கள் உட்பட 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும் என மொத்தம் 133 பேர் உயிரிழந்தனர். 830 பேர் படுகாயம் அடைந்தனர். ஹமாஸ் படையின் முக்கிய தளபதிகள், 20 பேர் இறந்தனர். இரவு, பகலாக குண்டு மழை பொழிவதால், காசா புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், குடும்பங்களுடன் பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர்.
Discussion about this post