இந்தியன்-2 படத்தில் நடிகர் விவேக்கிற்கு இந்த கதாபாத்திரமா?

சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

குழுந்தைகளுக்கு மிகவும் பிடித்த காமெடியனாக வலம் வருபவர் நடிகர் விவேக். சினிமாவில் காமெடியிலும் கருத்து இருக்கவேண்டும் என்பதை உணர்த்தியவர் இவர் தான்.இன்று உள்ள காமெடி நடிகர்கள் சிறிது நாள் காமெடியானாக நடித்துவிட்டு பின்பு ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிவிடுகின்றனர்.ஆனால் அன்று முதல் இன்று வரை காமெடியனாக மக்களை சிரித்து வைப்பத்தில் இவரை அடித்துக்கொள்ள முடியாது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த வெள்ளைப்பூக்கள் திரைப்படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.இதுவரை பார்க்காத விவேக்கை இந்த படத்தில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version