திருச்செந்தூர் பக்கத்துல உள்ள நா.முத்தையாபுரத்துல அரசு சார்பா நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி கலந்துகிட்டு பேசியிருக்காங்க. அப்போது மகளிர் உதவித் தொகைன்னு சொல்லிட்டு, இல்ல… இல்ல… அது உரிமைத்தொகைனு சொல்லியிருக்காங்க… தான் நாக்கு தவறுனத சமாளிக்க, உதவித்தொகைன்னா பாவம் பார்த்து கொடுக்கிறதுன்னு பயங்கரமான விளக்கமும் கொடுத்திருக்காங்க.
போனா போகுது, பாவம்னு சொல்லி கொடுக்கிறதுதான் உதவித்தொகைன்னு கனிமொழி சொல்லியிருக்கிறது சலசலப்ப ஏற்படுத்தி இருக்கு… அப்ப அரசு சார்பா உதவித்தொகைனு வழங்குறது போனா போவட்டும்னு பாவம் பார்த்து கொடுக்கிறதுதானா? ஏதோ பிச்ச போடுறமாதிரினு சொல்றதுதான் உங்க அகராதியில உதவித்தொகையா? விடியா அரசோட முதலமைச்சர்…. அதான் உங்க அண்ணணும் அப்படி போனா போகட்டும்னுதான் கொடுக்கிறாரா? எல்லாத்தையும் விடுங்க, உங்கள எம்.பி ஆக்குனது மக்கள் உங்களுக்கு கொடுத்த உரிமைத் தொகையா? உதவித் தொகையான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.