உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை ஈரான் காட்சிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு ஆயுத உற்பத்தியை அதிகரித்து தனது ஆயுத திறன்களை விரிவுபடுத்தி வரும் ஈரான், நாட்டின் தேசியப் பாதுகாப்புத் தொழில் நாளில் பவர் – 373 எனப் பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை எதிர்ப்பாயுதத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி கலந்து கொண்டனர். ரஷ்யாவின் எஸ்-300 ரக ஏவுகணை அமைப்பை விட, ஈரான் உருவாக்கியுள்ள பவர் – 373 சக்தி வாய்ந்தது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பாயுதம் எதிரிநாட்டு ஏவுகணைகளையும், விமானங்களையும் குறிவைத்து, தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமிர் ஹடாமி ((Amir Hatami)) தெரிவித்துள்ளார். அண்மையில் ஈரான் வான்பறப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை இதே ரக எதிர்ப்பாயுதம் மூலம் ஈரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.