சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. கிரிக்கெட் இரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கிவருகிறார்கள். இரசிகர்களின் கிரிக்கெட் மனநிலையைப் பயன்படுத்தி டிக்கெட் கட்டணமானது அதிக விலைக்கு வசூலிக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது. அதாவது 1500 ரூபாய்க்கு கிடைக்கும் டிக்கெட்டின் விலையானது சட்ட விரோதமாக 4000 மற்றும் 5000 ஆகிய விலைக்கு ப்ளாக்கில் விற்பனை ஆகிறது என்று இரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனையொட்டி அதிமுகவின் கொறாடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது டிவிட்டர்(சுட்டுரை) பக்கத்தில் இது குறித்து கேள்வியும் அரசு உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவருடைய சுட்டுரைப் பதிவு பின்னொட்டாக இணைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மீதும் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். (1/4)
— SP Velumani (@SPVelumanicbe) April 12, 2023