ஐபிஎல் 2023 – முதல் போட்டியில் சென்னையும் குஜராத்தும்…!

ஐபிஎல் 2023 தொடரானது இன்றிலிருந்து தொடங்குகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

யாருக்கு பலம்? 

கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நான்குமுறை சாம்பியனாக ஐபிஎல்-ல் வீறுநடை போட்டு வருகிறது. இந்த சீசன் தான் தோனியின் இறுதி சீசனாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதற்காகவே அவருக்கு ஒரு சிறந்த பிரிவு உபசாரத்தை இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் கோப்பையுடன் தோனியை வழியனுப்பி வைப்பதற்கே வீரர்களும் இரசிகர்களும் கூட விரும்புவார்கள். ஒரு சிறந்த கேப்டனை இந்த நாடு கொண்டாடி வழியனுப்பும் திருவிழாவாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே முதல் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய பலத்தை வெளிப்படுத்த தவறாது.

இன்னொரு பக்கம் குஜராத் டைடன்ஸ் எனும் நடப்பு சாம்பியன் அணி. கடந்த வருடம் யாரும் எதிர்பார்க்காமல் புதிய அணியாக களமிறங்கி வென்று காட்டியது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் தீரமான செயல் நடவடிக்கைகளால் குஜராத் அணி இளைஞர் பட்டாளங்களோடு களத்தி குதித்து ஒரு உத்வேக வெற்றியைப் பெற்றது. குறிப்பாக கடந்த சீசனில் குஜராத் அணி வீரர்களில் பெரும்பாலனோர் ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பு பெரிதளவில் பார்மில் இல்லை. ஆனால் ஐபிஎல் தொடங்கியதும் குஜராத் அணி வீரர்களின் பார்மிற்கு எதிரே யாராலும் செல்ல முடியவில்லை.

இன்றையப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருப்பதால் குஜராத் டைடன்ஸுக்கு உள்ளூர் இரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும். அதனால் குஜராத் அணிக்கே கூடுதல் பலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சென்னை வீரர்கள் விவரம் : 

கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ருத்ராஜ் கெய்வாட், மொயின் அலி,  அம்பத்தி ராயுடு, ரஹானே, பிரிடோரியஸ், சாண்ட்னர், ஷிவம் துபே, டெவான் கான்வே, தீபக் சஹார், மகேஷ் தீக்சனா, ப்ரசாந்த் சொலாங்கி, ஆகாஷ் சிங், துஷார் டேஷ்பாண்டே

குஜராத் வீரர்கள் விவரம் : 

கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ராகுல் திவாட்டியா, ஓடியன் ஸ்மித், விஜய் சங்கர், ஸ்ரீகர் பரத், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, முகமது ஷமி, ஷிவம் மாவி, யாஷ் தயாள்

Exit mobile version