16 ஆவது ஜ.பி.எல் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றிப்பெற்றது.அகமதாபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் குஜராத், சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சென்னை அணியினர் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். மேலும் தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் டிஎல்எஸ் விதி படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12.10க்கு போட்டி தொடங்கியது.
இதையடுத்து அணியின் தொடக்க ஆட்டகாரர்களான ருத்துராஜ் – கான்வே ஜோடி சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர். இதனையடுத்து களமிறங்கிய ரகானே,துபே மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, 5ஆவது முறையாக கோப்பயை கைப்பற்றியது.