சமீப காலமாக இணையதளங்களில் அடிக்கடி வைரஸ் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனால் பயனர்களுக்கு இணையதள சேவை என்பது பாதுகாப்பற்ற ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டுமெனில் இணையதள சர்வர்களில் பாதுகாப்பு அம்சங்களை கூடுதலாக சேர்க்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த நிலையில் பராமரிப்பு சேவை காரணமாக இணையதள சேவை 48 மணி நேரத்துக்கு பாதிக்கப்படும் என செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் ரஷ்யாவில் இருந்து வெளியாகி இருந்தது. தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு தான் சர்வர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய சைபர் செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளர் குல்ஷன் ராய் , இந்த செய்தி குறித்து பதட்டமடைய தேவையில்லை என கூறியுள்ளார். அனைத்து ஏற்பாடுகளும் உரிய இடத்தில் உள்ளன என தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் இணையதள சேவை முடங்க வாய்ப்பில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.