ஒவ்வோர் ஆண்டும் மே 17 அன்று சர்வதேச தொலைதொடர்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. மனித குலத்துக்கு தொலை தொடர்பு என்னும் சாதனம் ஆற்றிவரும் சேவை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தி மற்றும் தகவல்களைத் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஊருக்கு ஊர் முரசு அடித்து செய்தி சொன்ன காலங்கள் மாறி இன்று நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல்,குறுஞ்செய்திப் பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம் என்று சொல்லாம். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க், தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளில் தொலைபேசி என்று ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் மேம்படுத்தி 1876 ஆம் ஆண்டு திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.
இப்படி ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, ஃப்பெக்ஸ், மின்னஞ்சல், செய்தித் தொடர்புகள் போன்ற தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் படைந்த சாதனைகள் ஏராளம். 1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் ((International Telecommunication Union)) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுசரித்தும், மனித குலத்துக்கு ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றது.
ஆரம்பத்தில் இணையத்தில் ஆங்கில மொழியே செயல்பட்டுவந்த நிலையில், இன்று வலைதளத்தில் பல மொழிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன உலகத்தில் மாறிவிட்டது. சமூகம் மற்றும் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பிளவு ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும் என்பதால், இணையத்தைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் பல்வேறு தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் நம் வாழ்வில் தகவல் தொடர்பு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் கூட தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் முக்கிய பங்கை வகித்தது குறிப்பிடத்தக்கது….
– பாலாஜி, செய்தியாளர்.