சென்னையில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் தொடக்கம்

சென்னையில் தொடங்கிய சர்வதேச அளவிலான கராத்தே, கோபுடோ உள்ளிட்ட தற்காப்பு கலை போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை உலக கராத்தே சம்மேளனத்தின் தலைவர் கிரான் மாஸ்டர் ஹான்ஷி கிரிஸ் செஸ், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கராத்தே, கோபுடோ உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காட்டி அசத்தினர். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Exit mobile version