உலகின் கவனைத்தை ஈர்த்த பெண்:
பெண்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பலர் குரல் எழுப்பி உள்ளனர். அவர்களின் உரிமைக்காக பாடுபட்டவர்கள் பலர் உள்ளனர். பெண்களின் கல்வி குறித்து அவர்களும் படிப்பறிவு பெற வேண்டும் எண்ணத்தோடு புரட்சி செய்தவர்கள் ஏராளம். அவர்களில் ’மலாலா’ என்ற பெயரை நம்மால் அவ்வளவு எளிதில் நம்மால் மறந்து விட முடியாது. ஆம் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர் தான் மலாலா. தனது இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் பிறந்த நாளை ஜூலை 12ம் தேதி சர்வதேச மலாலா தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு பாகிஸ்தானனிய பெண்ணாக இருந்த மலாலா இன்று உலக பெண்களுக்காக போராடி வருகின்றார். மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பிறந்தார். பாகிஸ்தானில் தலிபான் அரசு பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தது. இதானல் இவரால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனது. இருந்தாலும் தலிபான் அரசின் தடியை மீறி பள்ளிக் கூரம் சென்றார். இதனால் தலிபான் அரசு அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. மலாலா யூசஃப்சாய் இந்தப் பெயரை உலகில் நிலைநாட்டச் செய்ததில் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு உள்ளது என்றும் சொல்லலாம்.
உலகப் பெண்களின் ஒற்றை குரல்!
பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஆன மலாலா பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்ததால் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இறையானார். இவர் 2012 ஆம் ஆண்டு தலிபான் நாட்டு பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப் பட்டார் மலாலா. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அவர், பயந்து ஒதுங்கிவிடாமல் தனது கருத்துக்களை முன்பைவிட வலுவாக முன்வைத்தார். அவர் தந்தை உடன் கைக்கோர்து பெண்களுக்கன அறக்கட்டள்சி ஒன்றை நிறூவினார். இந்த அறக்கட்டளையானது பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளை பேசியது. பெண்கல்வி உரிமைக்காகவும். குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தா மலாலாவுக்கு 2014-ஆம் ஆண்டு நொபல் பரிசு வழ்ங்கப்பட்டது. மிகவும் இளம் வயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2017ல் ஐக்கிய நாடுகளின் அமைதி தூதராக நியமிக்கப்பட்டர். இவர் நோபல் பரிசு மட்டுமல்லாமல் 40-பதிற்க்கும் மேற்பட்ட விருதுகளையும், பரிசுகளைஉம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் 2017-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைதி தூதராக நியமிக்கப்பட்டார். இவர் 2013ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். மலாலா பற்றிய பல புத்தகங்கள் வெளிவந்து கொண்டேதான் உள்ளன.அவற்றில் தமிழில் மலாலா வரலாற்றை, ‘மலாலா கரும்பலகை யுத்தம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஆயிஷா நடராசன். 2013-ம் ஆண்டு மலாலா ஐ.நா.வில் பெண் கல்வி குறித்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அன்று அவரின் பிறந்தநாளை ‘மலாலா தினம்’ என்று அறிவித்தது ஐ.நா. இப்படி பெண்களின் கள்விக்காகவும் உரிமைகாகவும் போராடி வரும் மலாலாவிற்கு அனைவரின் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துகள்..!!