இலங்கை தாக்குதலை விசாரிக்க சர்வதேச புலனாய்வுக் குழுவினர் இலங்கை விரைந்துள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தின்போது 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்கொலை தாக்குதலை விசாரிக்க அமெரிக்க புலனாய்வு குழு இலங்கை சென்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய புலனாய்வு குழுவினரும் சர்வதேச புலனாய்வு குழுவினரும் இலங்கை செல்லவுள்ளனர்.
இந்நிலையில், ஷாங்க்ரி லா 5 நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தாக்குதல் நடந்த 3 நட்சத்திர ஹோட்டல்களிலும் முகமது அஸ்லம் முகமது என்ற பெயருடைய ஒருவர் அறைகள் எடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே இலங்கை குண்டு வெடிப்புகள் குறித்து சில அமைச்சர்களுக்கு முன்பே தெரியும் என செய்திகள் வெளியாகி இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.