ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானாவிலிருந்து காட்டு யானைகளை வன உயிர் பூங்காக்களுக்கு விற்கப்படுவதைக் தடுக்க சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
அழிந்துவரும் உயினங்களின் விற்பனை தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், அத்தகைய உயிரினங்களின் இறக்குமதி, ஏற்றுமதி, மறு ஏற்றுமதியைக் கண்காணித்து தடுத்து வருகிறது. அந்த வகையில், உறுப்பு நாடுகளின் கூட்டம் சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில் உலகிலேயே அதிகமாக 2 லட்சம் யானைகளின் வசிப்பிடமாக உள்ள ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானாவில் இருந்து வன உயிர் பூங்காக்களுக்கு யானைகள் விற்கப்படுவதை கட்டுப்படுத்திக் கொள்ள அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு உறுப்பு நாடுகளில் 87 நாடுகள் ஆதரவாகவும், 29 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
Discussion about this post