ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி என அழைக்கப்படும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி ஆண்டுதோறும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான 14வது ஏரோ இந்தியா கண்காட்சி இன்று முதல் வருகிற 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 80 நாடுகளை சேர்ந்த விமானங்களும், விமான நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். முதல் நாளான இன்று நாட்டின் இலகுரக தேஜாஸ் போர் விமானம், ஹெச்டிடி-40 போன்ற உள்நாட்டு விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இதனை பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கண்டு ரசித்தனர். இதே போல் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் எம்.ஹெச் ஹெலிகாப்டர், 60 ஆர் ரோமியோ ஹெலிகாப்டர், இஸ்ரோலின் ஏரோஸ் போன்ற விமானங்களும் சாகசத்தில் ஈடுபட்டன. விமான கண்காட்சியை முன்னிட்டு பெங்களூர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Discussion about this post