குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் தனிநபர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் 144 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுக்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறினார்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் என்.பி.ஆர் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்பாக உரிய உத்தரவை நீதிமன்றம் வழங்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். மேலும், இந்த 144 வழக்குகளை விசாரிக்க ஒரு அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
Discussion about this post