வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இ.எம்.ஐ செலுத்த ஒத்திவைக்கப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு 3-வது முறையாக விசாரணைக்கு வந்த போது, வரும் வியாக்கிழமைக்குள் மத்திய அரசு இவ்வழக்கில் அரசுப் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதுவரை கடன் வசூலிப்பது தொடர்பான, தற்போது உள்ள இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post