கோத்தகிரி எத்தையம்மன் கோயிலில் புதிதாக பூசாரிகளை நியமிக்க வலியுறுத்தி ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள எத்தையம்மன் கோயிலில் பணிபுரிந்த பூசாரிகள் பணியை விட்டு விலகியதால் புதிய பூசாரிகளை நியமிப்பதில் பிரச்சனை உருவானது. இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக ஏற்கனவே இருந்த பூசாரிகளை வைத்து திருவிழாவை நடத்துவது என முடிவு எடுத்தனர். இந்தநிலையில் புதிதாக பூசாரிகளை நியமிக்க வலியுறுத்தி கோத்தகிரி-குன்னூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வரும் 20ஆம் தேதிக்குள் புதிதாக பூசாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆட்சியர் ரஞ்சித் சிங் அளித்த உறுதி மொழியை ஏற்று பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். இதனால் கோத்தகிரி-குன்னூர் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Discussion about this post