வங்கதேசத்தை வெளுத்து வாங்கிய இந்திய மகளிர் அணி!

 

வங்கதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய பெண்கள் அணியானது  மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 முன்னிலை பெற்றது. அதனையொட்டி இரண்டாவது போட்டியானது நேற்று மிர்புரில் நடைபெற்றது. ’டாஸ்’ வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஸ்மிருது வந்தனா(13) மற்றும்  ஷபாலி வர்மா (19) ஜோடி நல்ல துவக்கத்தினைக் கொடுத்தது. பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (0), யஸ்திகா (11), ஹர்லீன் (6), என அனைத்து வீரர்களும் வரிசையாக பெவிலியன் திரும்பினர். தீப்து(10), அமன்ஜோத்கவுர் (14), ஆறுதல் தர இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 95 ரன் மட்டும் எடுத்திருந்தது.

இந்த எளிதான இலக்கை விரைவில் எட்டி விடலாம் என்று வங்கதேச அணி ஒரு கணக்கு போட்டிருந்தது. ஆனால் அந்தக் கணக்கை இந்திய பந்துவீச்சாளர்கள் மாற்றி அமைத்துவிட்டனர்.  வங்கதேச அணியைச் சேர்ந்த  ஷமிமா( 5), ஷதி ராணி (5), முர்ஷிதா(4), ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட ’’மிடில் ஆர்டரிலும் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். கடைசி வரை  போராடிய கேப்டன் சுல்தானா 38 ரன் எடுத்தார். வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்தை சுழற்றிய ஷபாலி முதல் பந்தில் ரபேயாவை(0 ) ரன் அவுட் செய்தார். அடுத்த 5 பந்தில் 3 விக்கெட்டுகள் சாய்க்க, வங்கதேச அணி அடுத்த 20 ஓவரில் 87 ரன்னுக்கு சுருண்டது. ஒரு கட்டத்தில் 86/5 என வலுவாக இருந்த வங்கதேசம் அணியானது அடுத்து ஒரு ரன் மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது அணியின் இரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்னில் திரில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.

Exit mobile version