அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவ முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவனங்களும் முன்வர வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பயின்று உயர் பதவியில் உள்ள மாணவர்களும், தொழிலதிபர்களும், சமூக பொறுப்புணர்வை கருத்தில் கொண்டு, சிஎஸ்ஆர் எனப்படும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், நூலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முடியும் என அவர் கூறியுள்ளார். சிஎஸ்ஆர் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம், 2018 – 2019ஆம் கல்வியாண்டில், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகள் உட்கட்டமைப்பு, போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றித் தெரிவிப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.