நாகை மாவட்டம் திருவெண்காட்டில் இருக்கும் புதன்பகவானின் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயிலின் இந்திரப்பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றுவருகிறது.
கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதி சுவேதாரண்யேஸ்வர கோயிலில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் இந்திரப்பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின்12 ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வாக தெப்போற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தெப்போற்சவத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 7 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.
Discussion about this post