தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் பெரும் சவாலாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியான மாநிலம் குருகிராம் மானேசரில் பயங்கரவாத எதிர்ப்புப் படையான, தேசியப் பாதுகாப்புப் படையின் 34-வது எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மும்பையில் 2008-ல் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் போது தேசியப் பாதுகாப்புப் படையினர் தங்களது ஒருங்கிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதாகக் கூறினார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நிகழவில்லை என்றும், இந்தியாவைப் பொருத்தமட்டில் தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், நமது உத்திகளை புதுப்பிப்பதுடன் மாற்றிக் கொள்ளவும் தயாராக வேண்டும் என்றும், பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டுடன் முடிந்துவிடுவதில்லை. அது, ஒட்டுமொத்த உலக மக்களையும் பாதிப்பதாக அவர் கூறினார்.