இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கான தரவரிசையினை NIRF பட்டியலாக தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் மெட்ராஸ் ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களின் வரிசையில் 8 வது ஆண்டாக முதலிடம் பிடித்து வருகிறது. அனைத்துவித கல்வி செயல்பாடுகளில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் மெட்ராஸ் ஐஐடி உள்ளது. இதற்காக, மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி டெல்லியில் நடைபெறும் விழாவில் இன்று விருதினை பெறுகிறார்.
மேலும், இந்தியாவில் தலைச் சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை மாநில கல்லூரி 3 ம் இடம் பிடித்துள்ளது. சென்னை லயோலா கல்லூரி 7 ம் இடம் பிடித்துள்ளது. மத்திய மனிவளத்துறை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்கள் தேர்ச்சி விகிதம், பெறும் மதிப்பெண்கள், மாணவர்களின் ஆராய்ச்சி திறன், ஆசிரியர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.