தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் திட்டத்திற்கு வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று, மத்திய சட்டத்துறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. அதன்படி, தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வெளியுறவுத்துறை ஒப்புதலை, மத்திய சட்டத்துறை கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் திட்டத்துக்கு அனுமதிக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து இந்த நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
Discussion about this post