ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வரும்14-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்வதாக இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 63 வீரர்களும், 52 வீராங்கனைகளும் என 115 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
18 விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய இந்திய அணியினர் 4 நாட்கள் தனிமைபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.