இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் புதிய சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் ஏ+ கிரேடில் வருகிறார்கள். அவர்களின் சம்பளமானது 7 கோடி ரூபாயாக உள்ளது. இதில் ஜடேஜா தற்போதுதான் ஏ+ கிரேடில் தேர்வு ஆகியுள்ளார். அவர்களைத் தொடர்ந்து அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஏ கிரேடில் இணைந்துள்ளனர். அவர்களது சம்பளம் 5 கோடி ரூபாக உயர்த்தப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் ஏ கிரேடில் இருந்து பி கிரேடிற்கு இறக்கப்படுள்ளார். சுப்மன் கில்லும் சூர்ய குமார் யாதவும் சி கிரேடிலிருந்து பி கிரேடிற்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பி கிரேடில் உள்ளவர்களுக்கு சம்பளமானது 3 கோடி ரூபாயாகும்.
ஷர்துல் தாக்கூர் பி கிரேடில் இருந்து சி கிரேடிற்கு சென்றுள்ளார். குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் கிரேட் ‘சி’ ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட புதிய வீரர்கள் ஆவார்கள். இவர்களது சம்பளமானது 1 கோடி ரூபாயாகும். இந்த சம்பள வெளியீடானது தற்போது சர்ச்சையினையும் ஏற்படுத்தி வருகிறது. அணியில் நீண்ட நாட்களாக விளையாடாத பும்ராவிற்கு தொடர்ந்து ஏ+ கிரேடில் சம்பளம் வழங்கி வருவதும், ரிஷப் பந்த் எப்போது அணிக்கு திரும்பி வருவார் என்பது தெரியாது இருந்தாலும் அவர் ஏ கிரேடில் சம்பளம் பெற்று வருவதும் இரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
Discussion about this post