ஜம்மு காஷ்மீன் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் போருக்கு, இந்திய ராணுவம் தயாராக இருந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லியில், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ஒய்வு பெற்ற மாஜி ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, எல்லைத் தாண்டிச் சென்று, பாகிஸ்தானின், பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். இந்திய ராணுவம் வலுவான நிலையில் இருப்பதாகவும், இனி இந்தியாவிற்கு எதிராக எந்த அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post