சுதந்திர தின நாளில் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
நாடு முழுவதும் 73-வது சுதந்திர தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கே.ஜி செக்டார் வனப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியதோடு தாக்குதலும் நடத்தியது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post