இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டது என்று இந்திய ராணுவ தளபதி குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தலைவர்கள் காஷ்மீரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைமையை 100 மணி நேரத்திற்குள் ராணுவம் அகற்றியுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்று வரும் பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு 100 சதவிகிதம் உள்ளதாகவும் இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
Discussion about this post