மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் தயாரிக்கப்படும் நடுத்தர போக்குவரத்து விமானத்தை வாங்கும் செயல்முறையை இந்திய விமானப்படை தொடங்கியுள்ளது . இந்த போக்குவரத்து விமானம் மூலம் 18 முதல் 30 டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றி செல்லலாம் என விமானப்படை தெரிவித்துள்ளது. இத்திட்டம் மூலம் பாதுகாப்புத் துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏவுகணைகள், துப்பாக்கிகள், டாங்கிகள், விமானம் தாங்கிகள் உள்ளிட்டவைகளையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான பல திட்டங்களை செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post