பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடுத்த மாதம் இருநாட்டு உறவு குறித்து சந்தித்து பேசவுள்ளனர்.
17வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். மேலும் இருவரும் சந்தித்து பேசுவது குறித்து ஆலோசித்தனர். இகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் வெள்ளை மாளிகை, ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் ஜூனில் நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் பங்கேற்க இருப்பதாகவும், அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் ஒசாகா நகரில் இந்திய பிரதமர், அமெரிக்க அதிபர், ஜப்பான் பிரதமர் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post