வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 32 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டக்வொர்த் லூயிஸ் முறையில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி 99 பந்துகளில் 114 ரன்கள் குவித்தார்.

Exit mobile version