மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது, இரண்டு டெஸ்ட்கள் கொண்டத் தொடரில் மோத உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் டொமினிகாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியும் மேற்கிந்திய அணியும் சந்திக்கின்றன. மேலும் 12 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற டெஸ்ட் மேட்ச் டிராவானது. அப்போது மேற்கிந்திய அணியில் இருந்த ஒருவர் கூட இப்போது அணியில் இல்லை. ஆனால் கோலியும் டிராவிட்டும் அன்றைய இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். இன்றைய இந்திய அணியில் கோலி வீரராகவும், டிராவிட் பயிற்சியாளராகவும் உள்ளனர்.
யாருக்கு பலம்?
இந்த டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணிக்குதான் மிகப்பெரிய பலம் ஆகும். அதற்கு காரணம் மேற்கு இந்திய தீவுகளின் சமீபத்திய பல சறுக்கல்கள். குறிப்பாக இந்தாண்டு இந்தியாவில் நடைபெறப் போகும் உலகக்கோப்பை போட்டிகளில் தகுதிச் சுற்றுடன் வெளியேறி இரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. மேலும் மெற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணியை ஒப்புமைப் படுத்தினால் அனுபவமான வீரர்களும், திறமையான வீரர்களும் மேற்கிந்திய அணியினரைவிட இந்திய அணியில் அதிகம் உள்ளனர். இந்தத் தொடரின் இரண்டாவது மற்றும் இறுதிப் போட்டியானது இரு அணிகளுக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியாகும். அதனுடன் 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டிக்கான ரேஸ் தொடங்கிவிடும்.
டெஸ்ட்டில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்குமா இந்தியா?
இந்திய அணியானது கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.
அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது பலம். அஸ்வின் இல்லாமல் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது என்பது ஊரறிந்த உண்மை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 11 போட்டிகளை ஆடிய அஸ்வின் 60 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அவர் அடித்த ஐந்து சதங்களில் நான்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத்தான். மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பேட்டிங் ஆவரேஜ் 50 வைத்துள்ளார்.
மேலும் புஜாரா அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக யாராவது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறது அணி. யெஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருத்துராஜ் இவர்களில் ஒருவருக்கு மூன்றாவது இடத்தில் இறங்கக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதில் ஐந்தாவது பவுலர் ஒருவரை களமிறக்க அணியானது முடிவு செய்துள்ளது. உதன்கட் உள்ளூர் போட்டிகளில் நல்ல பார்மில் உள்ளார். அவரைத் தொடர்ந்து நவ்தீப் சைனியின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் பிரதான பவுலராக முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் உள்ளனர். ஜடேஜாவை தூணாக இருப்பார் என்று நம்ப்படுகிறது. பார்க்காலாம் நாளை ரோகித் மற்றும் கோலியின் அதிரடி வெல்லுமா என்று?