இரண்டாவது டி20 போட்டி: இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, மூன்று இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டெல்லியில் நடைபெற்ற முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வங்கதேச அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது இருபது ஓவர் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்தி, இன்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

வங்கதேச அணி பொறுத்த வரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Exit mobile version