துருக்கி நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

இரண்டு நாட்களாக துருக்கி நாடு மீது உலக நாடுகள் தங்கள் கவனத்தினைத் திருப்பியுள்ளது. அங்கே இரு தினங்களாக மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு மக்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி  படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பதற்காக பல நாட்டு மீட்புக்குழுவும் களத்தில் இறங்கியுள்ளது.

இன்று அதிகாலை துருக்கிப் பிரதமர் எர்டோகன் நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, 45 நாடுகள் துருக்கி நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர் மற்றும் பல மீட்புக்குழுவினரை அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இந்தியா நாட்டிலிருந்தும் மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர். துருக்கி மக்களுக்காக நிவாரணப் பொருட்களுடன் சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியுள்ள மனிதர்களினைத் தேடுவதற்காக சிறப்பு பயிற்சிப் பெற்ற நாய்களையும் உடன் கூட்டிச் சென்றுள்ளனர்.

Exit mobile version