சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி, இந்தியா மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக, நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
தனியார் விண்வெளி ஆராய்ச்சி பயண நிறுவனம் நடத்திய தேர்வில் மதுரையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தான்யா தர்ஷனம் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர், வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு செல்கிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாசாவின் முன்னாள் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் டான் தாமஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பி இருப்பது மிகப்பெரிய சாதனை என தெரிவித்துள்ளார்.