மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான பிரைன் லாரா, ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது உள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, கோப்பைகளை வெல்லும் திறனை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாடும் அனைத்து அணிகளும் ஒன்றை உணர்ந்துள்ளன. எந்தவொரு தொடராக இருந்தாலும் சரி, காலியிறுதி, அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் ஒன்றிலாவது இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். 2013க்கு பிறகு கோப்பைகளை வெல்ல தவறிய இந்திய அணி, தற்போது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் எனது சாதனையை (400 ரன்கள்) முறியடிக்க டேவிட் வார்னர் மற்றும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். தற்போது, இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி செல்லும் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் முன்னதாக களமிறங்கி விளையாடினால் எனது சாதனையை முறியடிக்க இயலும். ஆனால், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தால், எனது சாதனையை முறியடிக்க முடியாது. ஏனென்றால், அவர் சிறந்த வீரர் என்றாலும் கூட, பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாட அவரால் முடியாது என்று தெரிவித்துள்ளார்.