இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆஸ்திரேலிய அணியினர் மூன்று ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றிருந்தது. இதனையொட்டி மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தொடரை வெல்வதற்கு இரண்டு அணிகளும் முனைப்பு காட்டி களத்தில் இறங்கினர். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியினர் தொடக்கத்தில் நன்றாக விளையாடினர். ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஸ் கூட்டணி 68 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ட்ராவிஸ் ஹெட் 33 ரன்களின் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் அடிக்காமல் வெளியேறினார். 47 ரன்கள் அடித்த நிலையில் மிட்செல் மார்ஸ் பாணிடியா பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். பிறகு வந்த டேவிர் வார்னர் 23, லபுசேஞ் 28, அலெக்ஸ் ஹேரி 38, ஸ்டோனிஸ் 25, சீன் அபாட் 26, அகர் 17, ஸ்டார்க் 10, சாம்பா 10 ஆகியோர் வெளியேற 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலியா.
பிறகு 270 ரன்களை துரத்திய இந்திய அணி தொடக்கத்தில் நன்றாக ஆடியது. கேப்டன் ரோகித்தும் சுப்மன் கில்லும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சீன் அபாட் பந்துவீச்சில் ரோகித் சர்மா வெளியேறினார். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம்பா பந்துவீச்சில் சுப்மன் கில் வெளியேறினார். கேஎல் ராகுல் 32 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி மட்டுமே ஓரளவு ஆறுதல் அளித்தார். அவர் நிதானமாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். பிறகு ஹர்டிக் பாண்டியா 40 ரன்கள் எடுத்து ஓரளவு அணியை சரிகட்டினார். ஆனால் சூர்யகுமார் 0, அக்சர் படேல் 2, ஜடேஜா 18, குல்தீப் 6, ஷமி 18, சிராஜ் 3 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற 248 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் மூன்று போட்டிகளைக் கொண்ட இவ்வொரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆடம் சாம்பா
Discussion about this post