ஜடேஜாவின் சுழல்…சிதறியது ஆஸி. பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப் மிடில்!

இந்திய வந்துள்ள  ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டின் முதல் நாள் இன்று. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கமே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சிதான். முகமது ஷமியின் வேகத்தில் டேவிட் வார்னர் 1 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ஓப்பனர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். லபுசேனும் ஸ்டீவன் ஸ்மித்தும் சிறிது நேரம் நிலைத்து நின்றனர். லபுசேன் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார். பிறகு வந்த ரென்ஷா ரன்கள் ஏதும் எடுக்காமல் ஜடேஜாவிடம் எல்.பி.டபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவிடமே போல்டானார். பிறகு வந்த ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி இருவரும் முறையே 31,36 ஆகிய ரன்களில் ஆட்டம் இழந்தனர். 63.5 ஓவர்கள் முடிவில் 177 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டையும், அஸ்வின் 3 விக்கெட்டையும், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்து ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தனர்.

பின் களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவும், கேஎல் ராகுலும் பொறுமையாக தனது இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல்நாள் முடிவில் ரோகித் ஷர்மா 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேல் ராகுல் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். நாள் முடிவினை நெருங்கியதால் அஸ்வினை மூன்றாவது ஆட்டக்காரராக இறக்கியுள்ளனர்.

Exit mobile version