இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு தற்போது ஒரு சவால் காத்திருக்கிறது. அது வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர். அதற்கு முன் ஜூன் மாதம் ஆஸ்திரேலியா அணியுடன் லண்டன் ஓவலில் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு நடுவில் மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இது போன்ற தொடர்ந்து பல முக்கியமான போட்டிகள் உள்ளன. தற்போது இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் உள்ள அனைத்து அணிகளிலும் இடம் பெற்று இருக்கின்றனர். தங்களுடைய அணிக்காக சிறப்பான ஆட்டத்தினையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவின் சமீபகால ஆட்டங்கள் ஒரு சீராக இல்லாமல் இருந்து வருகிறது. அவர் சில போட்டிகளில் ரன் குவிக்க தவறுகிறார். அதேபோல ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சு சிறப்பாக செய்தால் பேட்டிங்கினை சரியாக கையாள தடுமாறுகிறார். இதைத் தவிர முக்கியமான விளையாட்டு வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் ஜஸ்ப்ரிட் பும்ரா. நீண்ட காலமாக இந்திய அணியில் அவரை பார்க்க முடிவதில்லை. அவர் இடத்தில் சிராஜ் ஓரளவு ஆறுதல் அளித்தாலும் அது அணிக்கு போதுமானதாக இல்லை என்பதே நிபுணர்களின் வாதம். ரிஷப் பண்ட்டிற்கு விபத்து, ஸ்ரேயஸ் அய்யருக்கு காயம் என்று  விலகி உள்ளனர். தொடர்ந்து சூர்ய குமார் யாதவ் ரன்கள் குவிக்க தவறுகிறார். இப்போதெல்லாம் களத்திற்க்கு வந்த உடனே பெவிலியன் திரும்பி விடுகிறார். டெஸ்டில் ஜொலித்த ஜடேஜாவால் ஒருநாள் போட்டியில் ஜொலிக்க முடியவில்லை. கேஎல் ராகுல் மோசமான பார்மில் உள்ளார். அவரும் பேட்டிங்கில் கவனம் செலுத்துவது அவசியம். அக்சர் படேல் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் விளையாடுகிறார்.

இந்திய அணியின் புதிய ரன் இயந்திரம் சுப்மன் கில் நன்றாக ஆடி வந்தார். ஆனால் தற்போது அவரும் சற்று தனது பார்மில் இருந்து பின்னடைவு ஆகியுள்ளார். இப்போதைக்கு இந்திய அணியின் ஒரே ஆறுதல் விராட் கோலிதான் என்று சொன்னால் மிகையாகாது. பழைய பார்மிற்கு மீண்டும் வந்துள்ளார் அவர். ஆனால் அவர் மட்டுமே அணியை கொண்டுசென்று வெற்றி வாகை சூட செய்வார் என்றால் அதுவும் கேள்வியே. ஐபிஎல் போட்டிகளில் அவரால் கோப்பையை ஜெயிக்க முடியவில்லை என்கிற தொடர் விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. இவற்றை எல்லாம் தாண்டி இன்னும் இந்திய அணி ஒரு முழுமையான அணியாக தயாராகமல் உள்ளதா என்கிற கேள்வியும் நிபுணர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அணியானது திடீர் திடீர் என்று மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இஷான் கிஷன் உள்ளே வெளியே என்று வந்து வந்து போகிறார். சஹாலை பயன்படுத்துவதை சற்று குறைத்துவிட்டார்கள். ஆனால் குல்தீப் யாதவ் நன்றாக செயல்படுகிறார். ஒரு சிறந்த ஃபினிஷர் அணிக்கு இன்னும் தேவையாக உள்ளனர். மேலும் வருங்காலத்தில் பலப் போட்டிகள் வர உள்ளன. அவற்றில் முக்கியமான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டலொழிய உலகக்கோப்பையினை வெல்லக்கூடிய வாய்ப்பினை பெறும்.

Exit mobile version