கர்நாடகாவில் தொடர் மழை – ஒக்கேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால், தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 12,000 கனஅடியில் இருந்து 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 10,042 கனஅடியில் இருந்து 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 103.37 அடியாகவும், நீர்இருப்பு 69.27 டிஎம்சி.யாகவும் உள்ளது.

அணையில் இருந்த டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version