தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணங்களை உயர்த்தி தொழில் முனைவோரை வேதனையில் ஆழ்த்தி வரும் விடியா ஆட்சி, இதோ அடுத்த இடியை தலையில் இறக்க ஆயத்தமாகி விட்டது. மாலை நேர உச்ச மின் பயன்பாட்டுக்கட்டணம் 20 சதவீதம் உயரப்போகிறது என்பதுதான் அந்த இடி.
பொதுவாக மின்சார பயன்பாட்டை இரண்டு விதமாகப் பிரிப்பார்கள். ஒன்று வழக்கமான மின்பயன்பாடு… மற்றது உச்சபட்ச மின் பயன்பாடு… நுகர்வோர்கள் காலையிலும், மாலையிலும் உச்சபட்சமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். அப்போது மின்சாரத் தேவை அதிகமாக இருப்பதால், கையிருப்பு போதாமல் தனியாரிடம் மின்சாரம் வாங்கி நுகர்வோர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அழுத்தத்துக்கு மாநில அரசு துணை போக கூடாது என தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்க விடியா அரசு முடிவெடுத்திருக்க தகவல்களால் கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள் மின் நுகர்வோர்கள். அதிலும் குறிப்பாக சிறுகுறு தொழில் முனைவோர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மின்சாரம் வணிகமயமாவதோடு, வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொருளாகி விடும். மின்கட்டண உயர்வால், நடுத்தர, சாமானிய மக்கள் மின்சாரம் இருந்தாலும் அதனை பயன்படுத்தினா எங்கே பில் அதிகமாக வந்துவிடுமோ என்று அஞ்சும் நிலைதான் இருக்கிறது.
மின்கட்டண உயர்வு குறித்த தகவல்கள் பரவிய நிலையில், இந்த கட்டண உயர்வு வீடுகளுக்கு பொருந்தாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. அதனால் நாங்கள் வசூலிக்கிறோம் என்று சப்பைக் கட்டு கட்டும் விடியா அரசு, இதற்கும் அதே காரணத்தையே தூக்கிக்கொண்டு வருகிறது. நாங்கலாம் வேற மாதிரி…. எங்களை யாரும் சீண்ட முடியாது என்று காலரை தூக்கிவிட்டு பேசும் ஸ்டாலின் ஏன் இந்த மின்சாரக் கட்டண உயர்வில் மட்டும் மத்திய அரசை எதிர்க்கவில்லை?
மத்திய அரசுக்கு பயந்தும், மானியத்துக்காகவும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதில் அக்கறை காட்டும் விடியா அரசு,இந்த மின்சார கட்டண உயர்விலும்அதே போல்தான் பின்பற்றுகிறது…சமீபத்தில் தான் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது அரசு. அப்படியிருக்க மீண்டும் மின்கட்டண உயர்வா என்று இப்போதே கலங்கிப் போயுள்ளனர் தொழில் முனைவோர்கள்…
மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக்கடிக்கும்… ஆனால் விடியா ஆட்சியில் மின்சாரம் என்னும் பெயரைச் சொன்னாலே ஷாக்கடிக்கும் நிலைநிலவுவது, பொதுமக்கள், சிறு குறு தொழில் முனைவோர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.