சென்னையில் நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீரழியும் மாணவர்களை நல்வழிப்படுத்த புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர் போலீசார். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களைத் தாண்டி சர்வதேச போதைப் பொருள் சந்தையில் கிடைக்கும் COCAINE, TRAMADOL , METHAMPHETMINE போன்ற விலையுயர்ந்த போதைப் பொருட்களின் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
குறிப்பாக METHAMPHETMINE என்ற போதைப்பொருளின் பழக்கம் அதிகரித்து வந்துள்ளது. இது ஒரு மருத்துவ பயன்பாட்டு பொருளாகும். ஆனால் இது பார்ட்டிகளில் போதை மருந்தாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகளை அறிந்தும் பலர் இதனை தயக்கமின்றி பயன்படுத்தி வருகின்றனர்.
METHAMPHETMINE, COCAINE க்கு நிகரான பரவச நிலையை தரக்கூடியது. அதே சமயம் விலையும் குறைவு என்பதால் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்ற போதைப்பழக்கத்தில் சிக்கி சீரழியும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் நல்வழிப்படுத்தவும், போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புது முயற்சியை எடுத்துள்ளது சென்னை காவல்துறை….
விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், போலீசார் போதை பொருள் கும்பலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே எதிர்கால தலைமுறையை இன்னலில் இருந்து மீட்டெடுக்க முடியும் என உறுதி பட தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் கதிரவன்