சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை கடந்த 9ம் தேதி 725 ஆக இருந்த நிலையில், 17ம் தேதி நிலவரப்படி 890 ஆக உயர்ந்துள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், வடசென்னைக்குட்பட்ட 1 முதல் 5 மண்டலங்களில், கடந்த 9ம் தேதி முதல் 17ம் தேதிவரை, நோய்க் கட்டுப்படுத்த பகுதிகள் 22 புள்ளி 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் சராசரியாக 10 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களாக இருக்கின்றனர். சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், வட சென்னையில் மட்டும் 61.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய சென்னையில் 11.6 சதவீதமும், தென்சென்னையில் 28.6 சதவீதமாகவும் உள்ளன. சென்னையில், வேளச்சேரி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நோய்க் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.