சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியத் தொடங்கியுள்ளனர்
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக விழுவதால் அருவி தண்ணீரில் மூலிகைத் தன்மை அதிகமுள்ளது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வருவதுண்டு. கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி அருவி வறண்டு காணப்பட்ட நிலையில் கோடை மழைக் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்து செல்கின்றனர். அவர்களின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது.
Discussion about this post