சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் தெளிப்பு நீர் பாசனத்தோடு வளர்க்கப்படும் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்து 600 ஏக்கரில் சம்பங்கி பூ சாகுபடி செய்யப்பட்டுகிறது. இந்தப் பூக்கள் நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது பெரும்பாலான விவசாயிகளுடைய தேர்வாக சம்பங்கி பூ சாகுபடியே இருந்து வரும் நிலையில். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் வரை மகசூல் தருகிறது. இது ஆண்டு முழுவதும் சீரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இயற்கை முறையில் தெளிப்பு நீர் பாசனம் மூலம் விளைவிக்கப்படும் சம்பங்கிப் பூவில் விளைச்சலும் அதிகரித்து, விலையும் ஓரளவு கைகொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post