ஸ்ரீநகரில் ஆல்கஹால் கலக்காத நறுமணத் திரவியங்களின் விற்பனை அதிகரிப்பு

ரமலான் மாதத்தை ஒட்டி, ஸ்ரீநகரில் ஆல்கஹால் கலக்காத நறுமணத் திரவியங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து இறைவனை வணங்குவது வழக்கம். அதன்படி இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு கடைகளில் ஆல்கஹால் கலக்காத நறுமணத் திரவியங்களை இஸ்லாமியர்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். தொழுகையின்போது உடலில் ஆல்கஹால் கலக்காத நறுமணம் பூசிக்கொள்வது நபி வழிமுறை என்பதால், இவ்வகை நறுமண திரவியங்களுக்கு அப்பகுதி இஸ்லாமியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனை சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version