முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரே நாளில் 3 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு ஆயிரத்து 464 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்து 837 கன அடி நீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு ஆயிரத்து 640 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்தால் நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரத்து 49 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 63.78 அடியாகவும் உள்ளது.
Discussion about this post