சொட்டுநீர் பாசனத்தின் மூலம் கருணை கிழங்கு சாகுபடி அதிகரிப்பு

கடலூரில் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம், மங்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஹெக்டெருக்கு மேல் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் புளிகருணை, நாட்டுகருணை உள்ளிட்ட கருணை கிழங்கு ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகள் தற்போது கருணைகிழங்குகளை அறுவடை செய்து வருகின்றனர். 100 சதவிகித மானியத்தில் தமிழக அரசு வழங்கிய சொட்டு நீர் பாசன குழாய்களால் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சொட்டுநீர் பாசன குழாய்கள் வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version