கடையநல்லூரில் பயிரிடப்பட்டு வரும் மக்கா சோளம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் மக்கா சோளம் பயிர் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. போதுமான மழை இல்லாத காராணத்தால் கிணற்று நீர் பாசனத்தின் மூலம் மக்கா சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விளைச்சல் நன்றாக இருந்தாலும் புழுவின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனையடுத்து புழுவின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த வேளாண்மை துறை அதிகாரிகள், மருந்து குறித்து அறிவுரை வழங்கினர். இதனால் புழுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சந்தையில் ஒரு குவிண்டால் மக்காசோளம் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறும் விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post