தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களின்கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருமண நிதியுதவி திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏற்கனவே அறிவித்து உத்தரவு வெளியிட்டது. இதனால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கூடுதலாக பயனாளிகள் பயனடைந்தனர்.
இந்நிலையில் திருமண நிதியுதவி திட்டங்களை போலவே சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தொழில்பயிற்சி நிலையங்களில் அனுமதி, மூன்றாம் பாலினத்தவர் நலத்திட்ட உதவிகள் ஆகிய திட்டங்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக பயனாளிகள் பயனடைவார்கள்.
Discussion about this post